டாக்கா,
வங்காளதேசத்தின் தலைநகரான டாக்காவில் உள்ள குனிபாரா பகுதியில் நூற்றுக்கணக்கான குடிசை வீடுகள் உள்ளன. இங்குள்ள ஒரு குடிசை வீட்டில் நேற்று முன்தினம் இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
தீ மளமளவென அருகில் உள்ள வீடுகளுக்கும் பரவியது. இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் அங்கு காட்டுத்தீ போல பற்றி எரிந்த தீயை அணைக்க தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். பல மணி நேரம் போராடிய பின்னர் இந்த தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இந்த தீ விபத்தில் சுமார் 100 குடிசை வீடுகள் எரிந்து சாம்பலானது. பலரது உடைமைகள், மின்சாதனங்கள் இதில் கருகி சேதம் அடைந்தன. எனினும் அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.