உலக செய்திகள்

ரஷியாவில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ; 2 பேர் உடல் கருகி சாவு

ரஷியாவில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பேர் உடல் கருகி பலியாயினர்.

மாஸ்கோ,

ரஷியா தலைநகர் மாஸ்கோவில் உள்ள குரோபோட்கின்ஸ்கை என்ற இடத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இங்கு எண்ணற்ற குடும்பங்கள் வசித்து வருகின்றன.

இந்த நிலையில், நேற்று காலை அடுக்குமாடி குடியிருப்பின் மேல்தளத்தில் உள்ள ஒரு வீட்டில் திடீரென தீப்பிடித்தது. மளமளவென கொழுந்துவிட்டு எரிந்த தீ, கண்இமைக்கும் நேரத்தில் அடுத்தடுத்த வீடுகளுக்கும் பரவியது.

இதனால் அங்கு கரும் புகைமண்டலம் உருவானது. அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த அனைவரும், அலறிஅடித்தபடி வீடுகளை விட்டு வெளியேறினர். தீவிபத்து குறித்த தகவல் கிடைத்ததும், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். ஆனால் அதற்குள் தீயின் கோரப்பிடியில் சிக்கி 2 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி இறந்தனர். இதையடுத்து, தீப்பிடித்த வீட்டுக்குள் சிக்கி இருந்த 4 பேரை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். தீ விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவில்லை.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்