உலக செய்திகள்

மெக்ஸிகோவில் பட்டாசு தொழிற்சாலையில் விபத்து: 19 பேர் பலி

மெக்ஸிகோவில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் 19 பேர் பலியாகினர்.

துல்டெபெக்

மெக்சிகோ நாட்டில் துல்டெபெக் நகரில் உள்ள ஒரு சிறிய பட்டாசு ஆலையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பலர் சிக்கிக் கொண்ட நிலையில், அவர்களை காப்பாற்ற போலீசாரும் தீயணைப்புப் படை வீரர்களும் ஈடுபட்டனர்.

அப்போது எதிர்பாராத விதமாக பயங்கர சத்தத்துடன் ஆலை மீண்டும் வெடித்தது. தீயை அணைக்கவும் மீட்புப் பணியிலும் ஈடுபட்டிருந்தவர்கள் இதில் சிக்கிக் கொண்டனர். சம்பவ இடத்திலேயே 19 பேர் உயிரிழந்தனர். 40 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

துல்டெபெக் நகரத்தில் ஏராளமான பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. கடந்த 2016 ஆம் ஆண்டு இப்பகுதியில் ஏற்பட்ட பட்டாசு ஆலை விபத்தில், 42 பேர் பலியாகினர், 70 பேர் படுகாயம் அடைந்தனர்.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை