ஜெஜியாங்,
சீனாவின் கிழக்கே ஜெஜியாங் மாகாணத்தில் கடலில் மீன்பிடி படகு ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த படகில் 20 பேர் பயணித்து கொண்டிருந்தனர். படகு ஜெஜியாங்கின் நிங்போ ஜூசன் துறைமுக பகுதியில் இருந்து 100 மைல்கள் தொலைவில் சென்றபொழுது திடீரென கவிழ்ந்தது.
இதுபற்றி தகவல் அறிந்து மீட்பு படகுகள் மற்றும் கடல்வழி தேடுதல் குழுவை சேர்ந்த விமானம் மற்றும் அருகேயுள்ள மீன்பிடி படகுகள் உதவியுடன் மீட்பு பணி நடைபெற்றது. இதுவரை 16 பேர் மீட்கப்பட்டு உள்ளனர். இந்த விபத்தில் படகில் பயணித்தவர்களில் 12 பேர் உயிரிழந்து விட்டனர்.
முதற்கட்ட விசாரணையில் ஜியாங்சு மாகாணத்தில் படகு பதிவு செய்யப்பட்டு உள்ளது தெரிய வந்தது. 4 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. இதனை தொடர்ந்து, இந்த விபத்து எப்படி நடந்தது என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.