உலக செய்திகள்

ஏமனில் பஸ்சில் மறைத்து வைக்கப்பட்ட குண்டு வெடித்து சிதறியதில் 5 பேர் உயிர் இழப்பு - 20 பேர் பலத்த காயம்

ஏமனில் பஸ்சில் மறைத்து வைக்கப்பட்ட குண்டு வெடித்து சிதறியதில் 5 பேர் உயிர் இழந்தனர். மேலும் 20 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

தினத்தந்தி


* சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ் அருகே உள்ள அக்ரபா நகரின் வான் எல்லையில் அத்துமீறி நுழைந்த ஆளில்லா விமானத்தை சிரியா ராணுவம் சுட்டு வீழ்த்தியது. முன்னதாக கடந்த திங்கட்கிழமை டமாஸ்கஸ் நகரில் இஸ்ரேலின் ஆளில்லா விமானங்கள் நடத்திய வான்தாக்குதலில் 10 வீரர்கள் பலியானது குறிப்பிடத்தக்கது.

* ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஹராமவுட் மாகாணத்தில் பஸ்சில் மறைத்து வைக்கப்பட்ட குண்டு வெடித்து சிதறியதில் 5 பேர் உயிர் இழந்தனர். மேலும் 20 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

* அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் சிறிய ரக விமானம் ஒன்று கட்டிடத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் விமானி சம்பவ இடத்திலேயே பலியானார்.

* சவுதி அரேபியாவில் தஞ்சமடைந்திருந்த, துனிசியாவின் முன்னாள் அதிபர் ஜினே அல் அபிதின் பென் அலி உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 83.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து