உலக செய்திகள்

துருக்கியில் வெள்ளம், நிலச்சரிவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 31 ஆக உயர்வு

துருக்கியில் வெள்ளம், நிலச்சரிவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 31 ஆக உயர்வடைந்து உள்ளது.

அங்காரா,

துருக்கி நாட்டில் பெய்து வரும் கனமழையால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது. இதனால், அவற்றில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 31 ஆக உயர்வடைந்து உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அவர்களில் கஸ்டமோனு மற்றும் சினோப் ஆகிய இரு மாகாணங்களில் அதிகளவில் மக்கள் பாதிப்படைந்து உள்ளனர்.

இந்த மாகாணங்களை பேரிடர் மண்டலங்களாக அதிபர் டயீப் எர்டோகன் இன்று அறிவித்து உள்ளார். இந்த சூழலில், 95 சதவீத மக்கள் அந்த பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டு விட்டனர். தொடர்ந்து, தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை