உலக செய்திகள்

வியட்நாமில் கனமழை, வெள்ளம்; 9 பேர் பலி

ஆசியாவில் அமைந்துள்ள நாடு வியட்நாம்.

தினத்தந்தி

ஹனோய்,

ஆசியாவில் அமைந்துள்ள நாடு வியட்நாம். இந்நாட்டின் குவாங் நாம் மாகாணத்தில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. கனமழை காரணமாக அம்மாகாணத்தின் ஹங்க், டா நங், ஹைய் அன் ஆகிய நகரங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனால் ஆயிரக்கணக்கான வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதையடுத்து மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், அந்நாட்டில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 11 பேர் காயமடைந்துள்ளனர். அதேவேளை, 5 பேர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு மாயமான நிலையில் மீட்பு, நிவாரணப்பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

கனமழை மேலும் சில நாட்களுக்கு நீடிக்கக்கூடும் என்று அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்