பெய்ரூட்
இதனையொட்டி அந்நாட்டின் நாடாளுமன்ற ஒப்புதலைப் பெற்ற எண்ணெய்த்துறை அமைச்சர் சாங்கன்னெ மேலை நாடுகள் தடைகளை நீக்கிய பிறகு எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க தொடர்ந்து முயன்று வருகிறார்.
பிரான்ஸ் நாட்டின் டோட்டல் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து உலகின் பெரிய எரிவாயு வயலான தென் பார்ஸ்சின் உற்பத்தியை அதிகரிக்கவுள்ளது ஈரான். சுமார் 5 பில்லியன் டாலர் செலவில், அடுத்து வரும் 40 மாதங்களில் இத்திட்டம் துவங்கும் என்று கூறப்படுகிறது.
ஈரானுக்கு ஏறக்குறைய 200 பில்லியன் டாலர்கள் எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க தேவைப்படுகிறது. இதில் 65 முதல் 75 சதவீதத்தை அந்நிய முதலீடுகள் மூலம் திரட்ட அது முயல்கிறது. வருகின்ற 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் 60 பில்லியன் டாலர்களை ஈர்க்க ஈரான் எண்ணுகிறது.
ஈரானின் 700 பில்லியன் பேரல்கள் அளவுடைய எண்ணெய் வளத்தில் தற்போது வெறும் 30 சதவீதத்திற்கும் கீழாகவே உற்பத்தி செய்து வருகிறது.