Image Courtesy : AFP 
உலக செய்திகள்

சீனாவின் முன்னாள் பிரதமர் லீ கெகியாங் காலமானார்

சீனாவின் முன்னாள் பிரதமர் லீ கெகியாங் மாரடைப்பால் உயிரிழந்தார்.

பீஜிங்,

சீனாவின் முன்னாள் பிரதமர் லீ கெகியாங்(வயது 68). ஷாங்காய் நகரில் வசித்து வந்த இவர் மாரடைப்பால் நேற்று உயிரிழந்தார். இவர் கடந்த 2013-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை சீனாவின் பிரதமராக இருந்தார்.

இவர் சீனாவின் தலைமைப் பொருளாதார அதிகாரியாக பத்து ஆண்டுகள் பணியாற்றினார். 1955-ம் ஆண்டு அன்ஹுய் மாகாணத்தில் பிறந்த லீ கெகியாங், கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளராக அரசியலில் நுழைந்தார். சீனாவின் பெக்கிங் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்ற அவர், 1994-ல் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.