உலக செய்திகள்

உக்ரைன் முன்னாள் எம்.பி. மனைவி கட்டுக்கட்டாக பணத்துடன் வெளிநாடு தப்பி செல்ல முயற்சி

உக்ரைனில் கடுமையான போர் சூழலை பயன்படுத்தி கோடிக்கணக்கான பணத்துடன் தப்பியோட முயற்சித்த முன்னாள் எம்.பி.யின் மனைவி தடுத்து நிறுத்தப்பட்டார்.

தினத்தந்தி

கீவ்,

ரஷியா மற்றும் உக்ரைன் இடையே கடுமையான போர் நடந்து கொண்டிருக்கிறது. கடந்த பிப்ரவரி 24ந்தேதி தொடங்கிய போரானது இதுவரை 1 கோடி பேரை அகதிகளாக வெளியேற்றி உள்ளது. 30 லட்சத்திற்கும் மேற்பட்டோர் போலந்து, ஹங்கேரி உள்ளிட்ட அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

உக்ரைனில் கடுமையான போர் நடந்து கொண்டிருக்கும் சூழலில், இதனை பயன்படுத்தி அந்நாட்டின் முன்னாள் எம்.பி.யின் மனைவி எல்லை வழியே ஹங்கேரி நாட்டுக்கு கோடிக்கணக்கான பணத்துடன் தப்பியோட முயற்சித்து உள்ளார்.

எனினும், சந்தேகத்தில் அவரை தடுத்து நிறுத்திய எல்லை காவல் படையினர் சோதனை செய்ததில் நடந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. உக்ரைன் நாடாளுமன்ற எம்.பி.யான கொத்வித்ஸ்கியின் மனைவி, போர் சூழலை பயன்படுத்தி கொண்டு, வேறு நாட்டுக்கு தப்பி செல்லும் நோக்குடன் சூட்கேஸ்களில் முடிந்தவரை பணம் நிரப்பியுள்ளார்.

இதன்பின்பு, மக்களுடன் மக்களாக ஜக்கர்பாட்டியா மாகாணத்திற்கு வந்து உக்ரைனுடனான எல்லை வழியே ஹங்கேரி நாட்டுக்கு செல்ல திட்டமிட்டு உள்ளார். அவரிடம் இருந்த சூட்கேஸ்களில் 28 மில்லியன் டாலர் (ரூ.212.9 கோடி) மற்றும் 1.3 மில்லியன் யூரோ (ரூ.10.91 கோடி) மதிப்பிலான பணம் இருந்துள்ளது.

எனினும், எல்லை பகுதியில் காவல் பணியில் ஈடுபட்டு இருந்த உக்ரைன் காவல் படை வீரர்கள் அவரை தடுத்து நிறுத்தி சோதனையிட்டு உள்ளனர். இதில், சூட்கேஸ்களில் இருந்த பணம் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டு உள்ளது. தொடர்ந்து, எம்.பி. மனைவியிடம் விசாரணையும் நடந்து வருகிறது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு