இஸ்லாமாபாத்,
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தின் தலைநகர் கராச்சியில் அல்-கொய்தா பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாகவும், அவர்கள் கோர்ட்டு, போலீஸ் பயிற்சி நிலையம் உள்ளிட்டவற்றில் தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டி வருவதாகவும் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து கராச்சி நகர் முழுவதும் போலீசார் மற்றும் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு தேடுதல் வேட்டை முடுக்கிவிடப்பட்டது. இதில், கராச்சியில் உள்ள பழமையான வீடு ஒன்றில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, அங்கு விரைந்து சென்று போலீசார், அந்த வீட்டை சுற்றிவளைத்து துப்பாக்கி முனையில் பயங்கரவாதிகளை கைது செய்தனர். மேலும் அந்த வீட்டில் இருந்து துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் உள்ளிட்ட ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. கைது செய்யப்பட்ட 4 பயங்கரவாதிகளையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.