உலக செய்திகள்

காபூல் மசூதியில் பயங்கரம்: தற்கொலைப் படை தாக்குதலில் 4 பேர் பலி

ஆப்கானிஸ்தானின் தலைநகரமான காபூலில் நேற்று நடைப்பெற்ற தற்கொலைப் படை தாக்குதலில் 4 பேர் பலியானார்கள்.


காபூல்

ஆப்கானிஸ்தானின் தலைநகரமான காபூலில் நேற்று நடைப்பெற்ற தற்கொலைப் படை தாக்குதலில் 4 பேர் பலியானார்கள். முஸ்லீம்களின் புனித மாதமான ரமலானில் இதுபோன்ற பல்வேறு தாக்குதல்கள் நடைப்பெற்று வருகின்றன.

அல் சகரா மசூதியில் நுழைந்த தற்கொலைப் படையினர் தாங்கள் வைத்திருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தனர்.இதில் 4 பேர் பலியானார்கள். 8க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த தக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத குழுவும் பொறுப்பேற்கவில்லை.

ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பு மந்திரி நஜிப் தனிஷ் காபூல் மசூதியில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில், ஒரு போலீஸ் உட்பட நான்கு பேர் கொல்லப்பட்டனர். மேலும் 8 பேர் படுகாயம் அடைந்தனர்என அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே காபூலில் தொடர்ச்சியாக இது போன்ற தாக்குதல்கள் நடைப்பெற்று கொண்டிருக்கின்றன. இதனைக் கண்டித்து அந்நாட்டு மக்கள் ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப் ஹானியை பதவி விலகக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்

ஆப்கானிஸ்தானின் முக்கிய தீவிரவாத குழுவான தாலிபான்களுக்கும், ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

கடந்த ஏப்ரல் மாதம் அமெரிக்க ராணுவம் கிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள ஜிகாதிகள் மீது தாக்குதல் நடத்தியது. இதில் பல ஜிகாதிகள் கொல்லப்பட்டனர். ஆனாலும் அவர்களின் நடமாட்டம் இருந்து கொண்டேயிருக்கிறது.

அமெரிக்க தளபதி ஜெனரல் ஜான்சன் நிகல்சன் இந்த வருடத்திற்குள் உள்ளூர் ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒழிப்பதாக உறுதி அளித்துள்ளார்.