பெஷாவர்,
பாதுகாப்பு படையினர் அந்த வீட்டை சுற்றி வளைத்தனர். அவர்களைக் கண்டதும் அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சரமாரியாக சுடத் தொடங்கினர். பாதுகாப்பு படையினரும் தக்க பதிலடி கொடுத்தனர்.
இரு தரப்பினருக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச்சண்டை நடந்தது. இதன் முடிவில் 4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
பாகிஸ்தானில் கைபர் பக்துங்வா மாகாணத்தின் ஜூமா பஜார் பகுதியில் ஷியா பிரிவினரின் வழிபாட்டுத்தலத்தில் கடந்த நவம்பர் மாதம் பயங்கரவாதிகள் நடத்திய அதிரடி தாக்குதலில் 3 சீக்கியர்கள் உள்பட 31 பேர் கொல்லப்பட்டனர். 40 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்த தாக்குதலில் மூளையாக இருந்து செயல்பட்ட பாகிஸ்தான் தலீபான் இயக்கத்தின் தளபதியான இஸ்லாம் உள்ளிட்ட 4 பேர்தான் காஜி பம்ப் பகுதியில் பாதுகாப்பு படையினருடனான துப்பாக்கிச்சண்டையில் பலியாகி உள்ளனர் என தெரியவந்துள்ளது. பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களில் தொடர்புடைய மொகிபுல்லா என்பவரும் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளில் ஒருவர் ஆவார்.
துப்பாக்கிச்சூடு நடந்த இடத்தில் இருந்து ஏராளமான ஆயுதங்கள், வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.