உலக செய்திகள்

ரஷ்யாவில் விபத்தில் சிக்கிய ராணுவ ஹெலிகாப்டர்; 4 பேர் பலி

ரஷ்யாவில் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று பயிற்சியின்பொழுது விபத்தில் சிக்கியதில் 4 பேர் கொல்லப்பட்டனர்.

மாஸ்கோ,

ரஷ்யாவின் கிழக்கே அனாடிர் விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்தில் தரையிறங்குவதற்காக அந்நாட்டின் மி-8 ரக ஹெலிகாப்டர் ஒன்று வந்துள்ளது.

ஆனால், திடீரென ஹெலிகாப்டர் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இதில், ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியுள்ளது. அதில் பயணம் செய்த 4 பேரும் பலியாகி விட்டனர் என கூறப்படுகிறது.

தொழில் நுட்ப கோளாறால் ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்டிருக்க கூடும் என்றும், பயிற்சி மேற்கொண்டபொழுது இந்த விபத்து ஏற்பட்டு உள்ளது என்றும் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு