File Photo: AFP 
உலக செய்திகள்

இந்தியாவில் இருந்து வரும் பயணிகள் 10 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர்: பிரான்ஸ்

இந்தியாவிலிருந்து பிரான்ஸ் வருபவர்கள் 10 நாட்களுக்குத் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது.

பாரிஸ்,

இந்தியாவில் கொரோனா வைரஸ் 2-வது அலையாக பரவி கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த சில தினங்களாக 2.5 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தங்களது நாட்டு மக்களை இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் இந்தியாவிலிருந்து வரும் பயணிகள் 10 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது.