உலக செய்திகள்

அமெரிக்காவில் இலவச கொரோனா பரிசோதனை; வரும் 19ந்தேதி தொடக்கம்

அமெரிக்காவில் வரும் 19ந்தேதி முதல் மக்கள் இலவச கொரோனா பரிசோதனை செய்ய வசதியாக வலைதளம் தொடங்கப்பட உள்ளது.

தினத்தந்தி

வாஷிங்டன்,

அமெரிக்கா நாட்டில் நாள்தோறும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகின்றன. இந்த நிலையில், ஜனாதிபதி ஜோ பைடன் கடந்த டிசம்பரில் வெளியிட்ட அறிவிப்பில், மக்கள் நலனுக்காக 500 மில்லியன் கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ள ஏதுவாக அரசால் வலைதளம் தொடங்கப்படும் என உறுதி கூறினார்.

இந்நிலையில், வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிவிப்பில், அமெரிக்க மக்கள் இலவச கொரோனா பரிசோதனை செய்ய வசதியாக வரும் 19ந்தேதி முதல் COVIDTests.gov என்ற வலைதளம் தொடங்கப்பட உள்ளது.

இதில் பெயர் மற்றும் முகவரி ஆகிய இரண்டை மட்டுமே குறிப்பிட்டால் போதும். இதுபற்றிய ஆர்டரை பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஒரு குடியிருப்பு முகவரிக்கு 4 பரிசோதனைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை