பெய்ரூட்,
பிரான்ஸ் நாட்டின் வலது சாரி கட்சியான தேசிய முன்னணி கட்சியின் அதிபர் வேட்பாளர் லே பென். இவர் லெபனான் நாட்டிற்கு வருகை தந்து தனக்கு ஆதரவு திரட்டி வருகிறார். இந்நிலையில், லெபனான் நாட்டு மத தலைவருடன் நடைபெற இருந்த அவரது சந்திப்பு ரத்து செய்யப்பட்டது.
இது பற்றி லே பென் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, மத தலைவருக்கு எனது மரியாதையினை தெரிவித்து விடுங்கள். ஆனால், எனது தலையில் குல்லா அணிவதில்லை என கூறினார்.
லெபனான் மத தலைவரின் செய்தியாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில், இந்த சந்திப்பிற்காக தலையில் குல்லா அணிய வேண்டும் என்ற தகவல் லே பென்னின் உதவியாளர்களிடம் முன்னரே தெரிவிக்கப்பட்டிருந்தது என கூறப்பட்டுள்ளது.
இது பற்றிய தேர்தல் கருத்து கணிப்புகள், வருகிற ஏப்ரலில் நடைபெறும் முதல் சுற்று ஓட்டு பதிவில் லே பென் அதிகளவில் வாக்குகள் பெறலாம். ஆனால், மே மாதத்தில் நடைபெறும் இறுதியான 2வது சுற்றில் முக்கிய வேட்பாளரிடம் அவர் தோற்று விடுவார் என தெரிவிக்கின்றன.