வாஷிங்டன்,
நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவி ஏற்றுள்ளது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
உண்மையிலேயே இது டிரம்ப் மற்றும் நரேந்திர மோடி இடையேயான நட்பு மீண்டும் பழைய உற்சாகத்தை அளிப்பதாக இருக்கும். இருதரப்பு ஆதரவு இன்னும் வலுவானதாக இருக்கும். இந்த நட்பில் செயல்திறன், நல்லுறவு அர்ப்பணிப்பு ஆகியவை அடங்கியுள்ளதால் இரு தலைவர்களின் எண்ணத்தை நிறைவேற்றுவதற்கு நன்மையாக அமையும். இந்தியாவுடனான நட்பு மிகவும் நேர்மறையான பாதையில் முன்னேறும். இரு நாடுகளின் நட்புறவு மோடி தலைமையில் தொடர்ந்து தழைத்தோங்கும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.