மெக்ஸிகோ,
மெக்ஸிகோ நாட்டில் உள்ள ஹிடால்கோ மாகாணத்தில் உள்ள சிறிய நகரம் லஹூலிலிபன். இந்த நகரம் வழியாக செல்லும் எரிபொருள் குழாயில் சட்ட விரோதமாக துளையிட்டு, பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்களை உள்ளூர் மக்கள் திருடி விற்பதாக கூறப்படுகிறது.
இவ்வாறு எரிபொருளை சிலர் சட்டவிரோதமாக எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த போது, திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், 21 பேர் உடல் முழுவதும் எரிந்து பலியாகினர். மேலும், 54 பேர் பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.