ஷன்ஷி,
வடக்கு சீனாவில் உள்ள ஷன்ஷி மாகாணத்தில் மிகப்பெரிய நிலக்கரிச் சுரங்கம் ஒன்று செயல்பட்டு வருகிறது. சீனாவின் பெரிய வர்த்தகக் குழுமங்களில் ஒன்றானா லுஆன் குழமத்தினரால் நடத்தப்படும் இந்தச சுரங்கத்தில் வருடத்திற்கு 1.2 மில்லியன் டன் நிலக்கரி உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்நிலையில் இன்று அதிகாலை 2 மணியளவில் இந்தச சுரங்கத்தில் வாயுக கசிவினால் திடீரென்று வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.