உலக செய்திகள்

காசாவில் 2-ம் கட்ட போர் நிறுத்தம்: விரைவில் அமல்

இரண்டாம் கட்ட போர் நிறுத்தம் அமலானால், ரபா எல்லை மீண்டும் திறக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தினத்தந்தி

காசா,

காசாவில் நீடித்த போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா உள்பட பல நாடுகளின் மத்தியஸ்தம் காரணமாக போர் நிறுத்தத்துக்கு ஹமாஸ் - இஸ்ரேல் தரப்பு சம்மதம் தெரிவித்ததையடுத்து, காசாவில் தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தத்தின் முதல் கட்டம் அமலானது. முதல் கட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்த இஸ்ரேலின் முக்கிய கோரிக்கையாக அந்நாட்டின் கடைசி பிணைக்கைதியின் உடல் பாகங்கள் மீட்கப்பட வேண்டும் என்பதே.

இஸ்ரேலின் காவல் துறையில் பணியாற்றிய வீலி என்ற நபர் ஹமாஸால் கொல்லப்பட்ட நிலையில், அவரது உடல் பாகங்களை தேடி மீட்பதில் இழுபறி நீதித்து வந்தது. இந்த நிலையில், நேற்று அவரது உடல் பாகங்கள் முழுமையாக மீட்கப்பட்டதை இஸ்ரேல் ராணுவம் உறுதிபடுத்தியிருக்கிறது.

இதையடுத்து, காசாவில் போர் நிறுத்தம் இரண்டாம் கட்டத்துக்கு நகர இருக்கிறது. அதன்படி, காசாவை நிர்வகிக்க பாலஸ்தீன அரசு அமைக்கப்படும் மற்றும் அப்பகுதியில் அமைதியை நிலைநாட்ட சர்வதேச நிலைத்தன்மைப் படை ஒன்றும் உருவாக்கப்படும். இரண்டாம் கட்ட போர் நிறுத்தம் அமலானால், ரபா எல்லை மீண்டும் திறக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பாலஸ்தீனர்கள் தடையின்றி பயணிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சண்டிகாரில் காலிஸ்தானிய பயங்கரவாதிகள் பெயரில் 26 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

ஈரானை தாக்கும் அளவுக்கு அமெரிக்காவிடம் வலிமை இல்லை; அதனாலேயே... மத்திய கிழக்கு நிபுணர் பேட்டி

மராட்டியம் அர்ப்பணிப்புள்ள ஒரு தலைவரை இழந்து விட்டது: அஜித் பவார் மறைவுக்கு தெண்டுல்கர் இரங்கல்

தமிழகம் உள்பட 5 மாநில சட்டசபை தேர்தல்: 4ம் தேதி தேர்தல் ஆணையம் ஆலோசனை

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரை வளர்ச்சிக்கான பார்வை கொண்டது: துணை ஜனாதிபதி