உலக செய்திகள்

இஸ்ரேல் - ஹமாஸ் போர்: காசாவில் 69 ஆயிரம் பேர் பலி

ஹமாஸ் ஆயுதக்குழுவினர் இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர்.

தினத்தந்தி

காசா சிட்டி,

காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது.

இதையடுத்து, ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் காசா முனையில் அதிரடி தாக்குதல் நடத்தியது. அதேவேளை, பணய கைதிகளில் பலரை ஒப்பந்த அடிப்படையிலும், ராணுவ நடவடிக்கை மூலமும் இஸ்ரேல் மீட்டது. இதையடுத்து, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பின் முயற்சியால் கடந்த மாதம் 10ம் தேதி இஸ்ரேல் , ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது.

இந்நிலையில், இஸ்ரேல் , ஹமாஸ் இடையேயான போரில் காசாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 69 ஆயிரத்தை கடந்துள்ளது. போர் நிறுத்தம் அமலுக்கு வந்த நிலையில் இடிபாடுகளுக்குள் சிக்கிய உடல்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். தற்போதைய நிலவரப்படி காசா முனையில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 69 ஆயிரத்து 169 பேர் உயிரிழந்துள்ளனர். இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டு வரும் நிலையில் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. அதேபோல், இஸ்ரேல், ஹமாஸ் போரில் காசா முனையில் 1 லட்சத்து 70 ஆயிரம் பேர் காயமடைந்துள்ளனர்.

அதேவேளை, 2023 அக்டோபர் 7ம் தேதி ஹமாஸ் ஆயுதக்குழுவால் கடத்தில் செல்லப்பட்டு கொல்லப்பட்ட இஸ்ரேலிய பணய கைதிகளில் எஞ்சிய 5 பேரின் உடலை ஹமாஸ் ஆயுதக்குழு இதுவரை இஸ்ரேலிடம் ஒப்படைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து