உலக செய்திகள்

தடுப்பூசி செலுத்தி சிறந்த கிறிஸ்துமஸ் பரிசளியுங்கள் - இங்கிலாந்து பிரதமர் அழைப்பு

மக்கள் தடுப்பூசி செலுத்தி நாட்டிற்கும் சிறந்த கிறிஸ்துமஸ் பரிசளிக்க வேண்டும் என்று இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அழைப்பு விடுத்துள்ளார்.

தினத்தந்தி

லண்டன்,

கிறிஸ்தவ மத மக்களின் பண்டிகைகளில் ஒன்றான கிறிஸ்துமஸ் உலகம் முழுவதும் நாளை (டிச.25) கொண்டாடப்படு உள்ளது. இந்த பண்டிகையை கொண்டாட பல்வேறு நாடுகளில் மக்கள் ஆயத்தமாகி வருகின்றனர்.

இந்நிலையில், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் நாட்டு மக்களுக்கு கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நாட்டு மக்களுக்கு வீடியோ மூலம் போரிஸ் ஜான்சன் வெளியிட்ட வாழ்த்துச்செய்தியில் கூறியதாவது, பரிசுப்பொருட்களை வாங்க இன்னும் சில மணி நேரங்கள் உள்ளபோதும், நீங்கள் இன்னும் உங்கள் குடும்பத்தினருக்கும், நாட்டிற்கும் சிறந்த பரிசுகளை அளிக்கலாம். அது என்னவென்றால் தடுப்பூசி செலுத்திக்கொள்வது தான். முதல் டோஸ், இரண்டாவது டோஸ் அல்லது பூஸ்டர் டோசாக இருக்கலாம் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுங்கள் என்றார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு