கொரோனா பெருந்தொற்று காரணமாக பொருளாதார வளர்ச்சியும் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த நிலையில், 2021-ல் உலகப் பொருளாதாரம் 4% அதிகரிக்கும் என்று உலக வங்கி கணித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பூசி விநியோகிக்கப்பட்டு வருவதால், பொருளாதாரம் உயரலாம் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
கொரோனா தாக்கத்தால், பலர் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பதாக உலக வங்கி கூறி உள்ளது. மேலும், வருமான பாதிப்பு பல நாட்களுக்கு தொடரும் என்றும் உலக வங்கி தெரிவித்து உள்ளது.