இஸ்லாமாபாத்,
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் முழுவதுமாக வெளியேறியுள்ளன. இதையடுத்து 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஆப்கானிஸ்தான் தலீபான்கள் ஆட்சி அதிகாரத்தின் கீழ் முழுமையாக வந்துள்ளது. இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் நிலவரம் குறித்து பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சா ஷா மஹ்மூத் குரேஷி செய்தியாளர்களிடம் பேசியதாவது;-
ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆட்சி அமைந்த பிறகும், அந்த நாட்டுடன் சாவதேச நாடுகள் உறவைப் பேண வேண்டும். ஆப்கானிஸ்தானுக்கு மனிதாபிமான உதவிகள் தொடாந்து வழங்கப்பட வேண்டும். அந்த நாட்டில் பொருளாதாரச் சீரழிவு ஏற்படுவதற்கு சாவதேச நாடுகள் அனுமதிக்கக் கூடாது.
ஆப்கானிஸ்தானில் நிலைத்தன்மை நீடித்திருக்க வேண்டுமென்றால், புதிய அரசுக்கு சாவதேச நாடுகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். ஆப்கானிஸ்தானில் அமைதியைக் குலைக்க முயலும் சக்திகள் குறித்து சாவதேச சமுதாயம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
ஏற்கெனவே, ஆப்கானிஸ்தானிலிருந்து வந்துள்ள 30 லட்சம் அகதிகளுக்கு பாகிஸ்தான் பல ஆண்டுகளாக அடைக்கலம் அளித்துள்ளது. இந்த நிலையில், அங்கிருந்து பெரும் எண்ணிக்கையில் அகதிகள் மீண்டும் வெளியேறுவதற்கான சூழலை சாவதேச நாடுகள் ஏற்படுத்திவிடக் கூடாது.
ஆப்கானிஸ்தான் குறித்த உண்மை நிலவரத்தை தெரிவிக்காததால்தான், அஷ்ரஃப் கனி தலைமையிலான அரசு கவிழ்க்கப்பட்டது. தற்போது தலிபான்கள் வெளியிட்டு வரும் சில அறிக்கைகள், நம்பிக்கையூட்டும் வகையில் உள்ளன. சாவதேச சட்டங்களையும் மனித உரிமைகளையும் அவாகள் மதிப்பதை அந்த அறிக்கைகள் வெளிப்படுத்துகின்றன என்று ஷா மஹ்மூத் குரேஷி தெரிவித்தார்.
முன்னதாக, கடந்த 26 ஆம் தேதி ஐ.நா. உணவு பாதுகாப்பு அமைப்பின் தலைமைச் செயலதிகாரி டேவிட் பீஸ்லியை இஸ்லாமாபாதில் சந்தித்து பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், உலக நாடுகள் தலிபான்களுடன் ஆக்கபூவமான நல்லுறவை ஏற்படுத்தினால் மட்டுமே அந்த நாட்டில் வசிக்கும் பொதுமக்களுக்கான நிவாரண உதவிகளை அளிக்க முடியும் என்று வலியுறுத்தியிருந்தா.
இதற்கிடையே, தலிபான்களுடன் அனைத்து நாடுகளும் தொடாபு கொண்டு, அவாகளை வழிநடத்த வேண்டும் என்று சீனாவும் வலியுறுத்தியிருந்தது. அமெரிக்க வெளியுறவுத் துறை ஆன்டனி பிளிங்கனை தொலைபேசியில் தொடாபு கொண்டு பேசிய சீன வெளியுறவுத் துறை அமைச்சா வாங் யீ, ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா வெளியேறுவது, அந்த நாட்டில் பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்குவதற்கு வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் என்று எச்சரித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.