உலக செய்திகள்

உலக அளவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரிப்பு: பாதிப்பு எண்ணிக்கை 4.58 கோடியாக உயர்வு

உலக அளவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3.32 கோடியாக உயர்ந்துள்ளது.

தினத்தந்தி

ஜெனீவா,

சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ 10 மாதங்கள் கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை.

இந்நிலையில் உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி, 4,58,91,761 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 3,32,37,759 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 11 லட்சத்து 93 ஆயிரத்து 209 பேர் உயிரிழந்துள்ளனர்.

வைரஸ் பரவியவர்களில் 1,14,60,793 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 83 ஆயிரத்து 191 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா - பாதிப்பு - 93,15,812, உயிரிழப்பு - 2,35,151, குணமடைந்தோர் - 60,18,841

இந்தியா - பாதிப்பு - 81,36,166, உயிரிழப்பு - 1,21,681, குணமடைந்தோர் - 74,30,911

பிரேசில் - பாதிப்பு - 55,19,528, உயிரிழப்பு - 1,59,562, குணமடைந்தோர் - 49,66,264

ரஷியா - பாதிப்பு - 15,99,976, உயிரிழப்பு - 27,656, குணமடைந்தோர் - 12,00,560

பிரான்ஸ் - பாதிப்பு - 13,31,984, உயிரிழப்பு - 36,565, குணமடைந்தோர் - 1,16,533

தொடர்ந்து அதிகபட்ச பாதிப்புள்ள நாடுகளின் விபரம்:-

ஸ்பெயின் -12,64,517

அர்ஜென்டினா - 11,57,179

கொலம்பியா - 10,63,151

இங்கிலாந்து - 9,89,745

மெக்சிகோ - 9,12,811

பெரு - 9,00,180

தென்னாப்பிரிக்கா - 7,23,682

இத்தாலி - 6,47,674

ஈரான்- 6,04,952

ஜெர்மனி - 5,17,720

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்