உலக செய்திகள்

ரஷிய செய்தி நிறுவன செயலிகளுக்கு ‘கூகுள்’ தடை...!

ரஷிய செய்தி நிறுவன செயலிகளுக்கு கூகுள் தடை செய்துள்ளது.

கலிபோர்னியா,

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ள நிலையில், ரஷியா மீதான புதிய தடைகளில் ஒரு பகுதியாக அந்நாட்டின் அரசு ஊடக நிறுவனங்களுக்கும் தடை விதிக்கப்படும் என்று ஐரோப்பிய ஆணைய தலைவர் உர்சுலா வான் டெர் லியென் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் ரஷியாவின் ஆர்.டி. ஒலிபரப்பு நிறுவனம், ஸ்புட்னிக் செய்தி நிறுவனம் ஆகியவற்றின் செயலிகளை கூகுள் தடை செய்துள்ளது. ஐரோப்பா முழுவதும் கூகுள் பிளே ஸ்டோரில் இந்த செயலிகளை பதிவிறக்கம் செய்ய முடியாது என்று கூகுள் தெரிவித்துள்ளது.

ரஷிய செய்தி நிறுவனங்களுடன் தொடர்புடைய யூடியூப் சேனல்களை ஏற்கனவே கூகுள் தடை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை