Image Courtesy:Grok AI 
உலக செய்திகள்

கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி

தற்போது ஜிமெயிலில் புதிய டூல் ஒன்றை கூகுள் அறிமுகம் செய்துள்ளது.

தினத்தந்தி

வாஷிங்டன்,

இ மெயில் எனப்படும் மின்னஞ்சல் பயனபடுத்தாதவர்களே இல்லை என சொல்லும் அளவிற்கு தற்போது இ மெயில் சேவையின் பயன்பாடு அதிகரித்துள்ளது. பல்வேறு தளங்கள் இ மெயில் சேவை வழங்கினாலும் கூகுளின் இ மெயில் (ஜி மெயில்) தான் இதில் முதலிடம் வகிக்கிறது.

உலகம் முழுவதும் சுமார் 180 கோடி ஜிமெயில் கணக்குகள் உள்ளன. பயனர்களை கவரும் வகையில் அவ்வப்போது புது அப்டேட்களை கூகுள் நிறுவனம் வெளியிடுவது வழக்கம்.

அந்த வகையில் தற்போது ஜிமெயிலில் புதிய டூல் ஒன்றை கூகுள் அறிமுகம் செய்துள்ளது. மெயில் இன்பாக்ஸ்களில் குவியும் நியூஸ் லெட்டர் உள்ளிட்ட அவசியமற்ற மெயில்களை மேனேஜ் சப்ஸ்கிரிப்ஷன் எனும் புதிய டேப் கீழ் கொண்டு வர ஜிமெயில் திட்டமிட்டுள்ளது.

இவ்வாறு செய்யும் போது நியூஸ் லெட்டர், டீல்ஸ் மற்றும் வியாபார ரீதியிலான மெயில்களை எளிதில் கண்டறிந்து நீக்கவோ வகைப்படுத்த முடியும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்பாக்ஸ்களில் தேவையின்றி குவிந்து இருக்கும் மெசேஜ்களை பில்டர் செய்து தேவையான மெயில்களை மட்டும் எளிதில் பார்க்க முடியும் என்பதால் ஜிமெயில் பயன்படுத்துபவர்கள் மத்தியில் இந்த வசதி மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்