கவுதமாலா சிட்டி,
கவுதமாலா நாட்டில் வடகிழக்கு பீட்டன் பகுதியில் இருந்து தலைநகர் நோக்கி பயணிகள் பேருந்து ஒன்று சென்றுள்ளது. இந்நிலையில், கவுதமாலா சிட்டியில் இருந்து கிழக்கே 150 கி.மீ. தொலைவில் கவுலான் நகராட்சி பகுதியில் சென்று கொண்டிருந்த பேருந்தின் பின்புறம் லாரி ஒன்று மோதி விபத்து ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தில் 18 வயதுக்கு உட்பட்ட 9 பேர் உள்பட 20 பேர் பலியாகி உள்ளனர். பலர் காயமடைந்தனர். அவர்கள் அந்த பகுதியிலுள்ள பல்வேறு மருத்துவமனைகளுக்கும் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.