உலக செய்திகள்

உக்ரைனின் மரியபோல் நகரில் ரஷ்யா - உக்ரைன் படைகள் இடையே துப்பாக்கிச் சண்டை...!

உக்ரைனின் மரியபோல் நகரில் ரஷ்யா - உக்ரைன் படைகள் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது.

உக்ரைன்,

உக்ரைன் மீது ரஷியா தொடுத்த போர் இன்று 6வது நாளாக நீடித்து வருகிறது. சர்வதேச அளவில் பல்வேறு உலக நாடுகள் கடும் கண்டனங்களை தெரிவித்தபோதும், உக்ரைனுக்கு எதிரான படையெடுப்பில் இருந்து ரஷியா பின்வாங்க தயாராக இல்லை.

ஒருபுறம் பேச்சு நடத்த உக்ரைனுக்கு அழைப்பு விடுத்தபோதும், அணு ஆயுதங்களை பயன்படுத்த உத்தரவு, படைகள் குவிப்பு, எல்லைகளை முற்றுகையிடுதல் போன்ற செயல்களில் ரஷியா இறங்கி உள்ளது.

இந்த நிலையில், உக்ரைனின் மரியபோல் நகரில் ரஷ்யா - உக்ரைன் படைகள் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது. இரு நாட்டு படைகளும் பயங்கரமாக சண்டையிட்டு வருவதால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும் மரியபோல் நகரில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில் நகரம் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை