பென்சில்வேனியா,
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில், பிட்ஸ்பர்க் நகர கோர்ட்டு அமைந்து உள்ள வளாகத்தில் ஒருவர் நேற்று மதியம் நுழைந்து கைத்துப்பாக்கியால் அங்கு இருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுடத்தொடங்கினார். இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. அங்கு இருந்தவர்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக நாலாபுறமும் ஓட்டம் பிடித்தனர். இதில் ஒரு போலீஸ்காரர் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
இதற்கிடையே அங்கு வந்த போலீஸ் அதிகாரி ஒருவர், துப்பாக்கிச்சூடு நடத்தியவரை சுட்டுக்கொன்றார்.
படுகாயம் அடைந்த 4 பேரும் அங்கிருந்து உடனடியாக மீட்கப்பட்டு ஆம்புலன்சுகளில் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
துப்பாக்கிச்சூடு நடத்தியவர், மாசன்டவுன் என்ற இடத்தை சேர்ந்த பேட்ரிக் எஸ். டோடெல் (வயது 61) என்பது தெரிய வந்துள்ளது.
அதே நேரத்தில் அவர் எதற்காக துப்பாக்கிச்சூடு நடத்தினார் என்பது குறித்து தகவல் இல்லை.