உலக செய்திகள்

பர்கினோ பசோ: அரசு ஆதரவு குழுவினர் மீது துப்பாக்கிச்சூடு - 14 பேர் பலி

பர்கினோ பசோ நாட்டில் அரசு ஆதரவு குழுவினர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 14 பேர் உயிரிழந்தனர்.

தினத்தந்தி

ஒவ்கடங்கு,

மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடுகளில் ஒன்று பர்கினோ பசோ. நைஜீரியா, மாலி போன்ற நாடுகளை எல்லைகளாக கொண்டுள்ள இந்நாட்டில் அல்கொய்தா, ஐ.எஸ். போன்ற பயங்கரவாத அமைப்புகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.

இந்த பயங்கரவாத அமைப்புகள் பொதுமக்கள், பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால், இந்த பயங்கரவாத குழுக்களை ஒழிக்க அந்நாட்டு பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். பயங்கரவாதிகளுக்கு எதிராக பாதுகாப்பு படையினருக்கு உதவியாக அரசு ஆதரவு குழுக்களும் ஆயுதமேந்திய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், அந்நாட்டின் லோரோவும் மாகாணம் டிடவோ நகரில் அரசு ஆதரவு கிளர்ச்சி குழுவினர் மீது பயங்கரவாதி துப்பாக்கிச்சூடு நடத்தினார். இந்த துப்பாக்கிச்சூட்டில் அரசு ஆதரவு கிளர்ச்சிக்குழுவினர் 14 பேர் உயிரிழந்தனர்.

இந்த தாக்குதலை ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பை சேர்ந்த பயங்கரவாதி நிகழ்ச்சி இருக்கலாம் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு