உலக செய்திகள்

கைப்பந்து விளையாடிக்கொண்டிருந்தவர்கள் மீது சரமாரி துப்பாக்கிச்சூடு - 8 பேர் பலி

கைப்பந்து விளையாடிக்கொண்டிருந்தவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்தனர்.

தினத்தந்தி

கியூடோ,

தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு ஈக்வடார். இந்நாட்டின் கயாக்யூலி மாகாணம் குவாஸ்மா நகரில் பொதுவெளியில் சிலர் கைப்பந்து விளையாடிக்கொண்டிருந்தனர்.

அப்போது, அங்கு துப்பாக்கியுடன் வந்த நபர் கைப்பந்து விளையாடிக்கொண்டிருந்தவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினார்.

இந்த தாக்குதலில் 8 பேர் உயிரிழந்தனர். மேலும், 10 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பியோடிய நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

போதைப்பொருள் கடத்தல் கும்பல் ஆதிக்கம் அதிகமுள்ள ஈக்குவடாரில் அவ்வப்போது கடத்தல் கும்பல்கள் இடையே மோதல் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. அதேவேளை பொதுமக்கள் மீதும் கடத்தல் கும்பல்கள் தாக்குதல் நடத்தும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு