உலக செய்திகள்

ஹைதி: போலீசார் நடத்திய அதிரடி தாக்குதலில் ஆயுத கும்பலை சேர்ந்த 28 பேர் பலி

ஹைதி நாட்டில் போலீசார் நடத்திய அதிரடி தாக்குதலில் ஆயுத கும்பலை சேர்ந்த 28 பேர் உயிரிழந்தனர்.

தினத்தந்தி

போர்ட்-ஓ-பிரின்ஸ்,

கரீபியன் தீவு நாடான ஹைதியில் கடந்த 2021-ம் ஆண்டு அதிபர் ஜோவெனல் மொய்ஸ் படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து, அந்நாட்டில் அரசியல் நிலைத்தன்மையின்றி ஆயுத கும்பல்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது.

ஆயுத கும்பலின் வன்முறை பல மடங்கு அதிகரித்துள்ளது. மேலும் தலைநகர் போர்ட்-ஓ-பிரின்ஸ் உள்ளிட்ட பல இடங்களை ஆயுத கும்பல் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது.

இந்நிலையில், அந்நாட்டின் தலைநகர் போர்ட்-ஓ-பிரின்ஸ் அருகே பெடன் வெலி பகுதியில் நேற்று போலீசாருக்கும் ஆயுத கும்பலுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்றது. இந்த மோதலில் ஆயுதக்குழுவை சேர்ந்த 28 பேர் உயிரிழந்தனர்.

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?