போர்ட் டோ பிரான்ஸ்,
ஹைதி அதிபர் ஜொவினெல் மொய்சே 28 பேர் கொண்ட வெளிநாட்டு கூலிப் படையால கொல்லட்டப்பட்டார். இந்தச் சம்பவம் உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து ஹைதியில் அசாதரணமான சூழல் நிலவுகிறது
இந்தசூழலில் ஹைதியில் பதற்றத்தை குறைக்கவும், துறைமுகங்கள், விமான நிலையங்களை பாதுகாக்க அமெரிக்கா மற்றும் ஐ.நா. தங்களது பாதுகாப்பு வீரர்களை அனுப்புமாறு ஹைதி அரசுக் கேட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்னர், ஹைதிக்கு எப்.பி.ஐ. அதிகாரிகளை அனுப்ப திட்டமிட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்த நிலையில் இந்தக் கோரிக்கையை ஹைதி அரசு விடுத்திருந்தது.
இந்நிலையில் ஹைதி நாட்டின் அதிபர் ஜோவனல் மோயிஸ் சுட்டுக்கொல்லப்படுவதற்கு முன்பாக கூலிப்படையினரால் அவர் கடுமையாக சித்ரவதை செய்யப்பட்டதாக இடைக்கால பிரதமர் கிளாடி ஜோசப் தெரிவித்துள்ளார்.