உலக செய்திகள்

கொடூர கொரோனாவை தொடர்ந்து சீனாவில் மேலும் ஒரு பயங்கர வைரஸ்

கொடூர கொரோனாவை தொடர்ந்து சீனாவில் மேலும் ஒரு பயங்கர வைரஸ் பரவி வருகிறது.

தினத்தந்தி

பெய்ஜிங்

சீனாவின் குளோபல் டைம்ஸ் வெளியிட்டு உள்ள டுவிட்டில் சீனாவின் யூனான் மாகாணத்தைச் சேர்ந்த ஒருவர் திங்களன்று சாண்டோங் மாகாணத்திற்கு பேருந்தில் வேலைக்குச் சென்று கொண்டிருந்தபோது இறந்தார். அவர் ஹான்டவைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது" என குறிப்பிட்டுள்ளது.

ஹான்டவைரஸ்கள் என்பது வைரஸ்கள் கொண்ட ஒரு குடும்பமாகும், அவை முக்கியமாக கொறித்துண்ணிகளால் பரவுகின்றன மற்றும் பிற நோய்களை மக்களுக்கு ஏற்படுத்தக்கூடும் வல்லமை படைத்தது என்றும் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் தெரிவித்துள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், இது ஹான்டவைரஸ் நுரையீரல் மற்றும் சிறுநீரகத்தை பாதித்து உடன் ரத்தக்கசிவு காய்ச்சலை ஏற்படுத்தும்.

நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் படி, இந்த நோய் சிறுநீர், மலம், மற்றும் கொறித்துண்ணிகளின் உமிழ்நீர் ஆகியவற்றுடன் தொடர்பு கொண்டால் மட்டுமே பாதிக்ககூடும்.

தலைவலி, தலைச்சுற்றல், குளிர் மற்றும் வயிற்றுப் பிரச்சினைகள் ஆகியவற்றுடன் சோர்வு, காய்ச்சல் மற்றும் தசை வலிகள் ஆகியவை எச்.பி.எஸ் அறிகுறிகளில் அடங்கும், இது இருமல் மற்றும் மூச்சுத் திணறலுக்கு வழிவகுக்கும் மற்றும் ஆபத்தானது என்று நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்