உலக செய்திகள்

‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து

லட்சக்கணக்கான மக்களின் உயிர்களை காப்பாற்றிய மனநிறைவே தனக்கு போதுமானது என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

வாஷிங்டன்,

உலகின் மிகவும் உயர்ந்த நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. நேற்றுமுன்தினம் அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலா எதிர்க்கட்சி தலைவர் மரியா கொரினா மச்சாடோவுக்கு அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் நோபல் பரிசு கனவு தகாந்தது. இதுகுறித்து வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டியளித்தார்.

அப்போது அவர் லட்சக்கணக்கான மக்கள் உயிர்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி என பெருமிதம் அடைந்தார். அவர், நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட மரியா கொரினா என்னிடம் தொலைபேசியில் அழைத்து பேசினார். அப்போது அவர் நோபல் பரிசை எனக்கு அர்ப்பணிப்பதாகவும், நீங்கள்தான் இதற்கு தகுதியானவர் என தெரிவித்தார்.

இருப்பினும் நான் நோபல் பரிசை எனக்கு தாருங்கள் என கேட்கவில்லை. நோபல் பரிசை மரியா பெறுவது சரிதான். ஏனென்றால் அவருடைய போராட்டத்தில் நானும் பங்கு கொண்டு உதவி செய்து வருகிறேன். போர்களை நிறுத்தி லட்சக்கணக்கான மக்களின் உயிர்களை காப்பாற்றியதே மகிழ்ச்சியாக உள்ளது. அந்த மனநிறைவே எனக்கு போதுமானது என்றார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்