உலக செய்திகள்

உக்ரைன் பக்முத் நகரில் தீவிர சண்டை - ரஷிய படைகள் தொடர் தாக்குதல்

உக்ரைனின் பக்முத் நகரில் மிகத்தீவிரமாக சண்டை நடந்து வருவதாக அந்நகர துணை மேயர் தகவல் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

பக்முத்,

உக்ரைனின் ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு நகரமான பக்முத் நகரில் மிகத்தீவிரமாக சண்டை நடந்து வருவதாக அந்நகர துணை மேயர் தகவல் தெரிவித்துள்ளார்.

டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் பக்முத் மற்றும் அருகிலுள்ள அவ்திவ்கா நகரங்கள் மீது ரஷிய படைகள் தொடர் தாக்குதல் நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் உக்ரைனிய துருப்புகள் உறுதியாக நிற்பதாக அவர் குறிப்பிட்டார்.

தாக்குதலுக்கு முன்பு சுமார் 80 ஆயிரம் பேர் இந்நகரில் வாழ்ந்து வந்தனர். ஆனால் படையெடுப்பு தொடங்கியதில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக பலர் வெளியேறிய நிலையில், இப்போது அங்கு 12 முதல் 15 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர்.

அவர்களுக்குத் தேவையான உதவிகளை அரசு முடிந்த அளவு செய்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்