உலக செய்திகள்

தென் கொரியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து 5 ராணுவ வீரர்கள் பலி

தென் கொரியாவில் கடற்படை தளத்தில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி 5 ராணுவ வீரர்கள் பலியானார்கள்

சியோல்:

தென்கொரியா நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள போஹாங்நகரில் உள்ள கடற்படை தளத்தில் ராணுவ ஹெலிகாப்டர் பழுதுபார்ப்புக்கு பின்னர் இன்று சோதனை ஓட்டம் நடைபெற்றது . அப்போது கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர் திடீரென்று தரையில் மோதி, வெடித்து சிதறியது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் சென்ற 5 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒரு ராணுவ வீரர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது எப்படி? என்பது குறித்த விசாரணைக்கு தென்கொரியா ராணுவ அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது