Image Courtesy: AFP 
உலக செய்திகள்

அமெரிக்க முன்னாள் வெளியுறவு மந்திரி ஹிலாரி கிளிண்டனுக்கு கொரோனா

அமெரிக்க முன்னாள் வெளியுறவு மந்திரி ஹிலாரி கிளிண்டனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

நியூயார்க்,

அமெரிக்க முன்னாள் வெளியுறவு மந்திரி ஹிலாரி கிளிண்டன் (வயது 74). இவருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு நேற்று முன்தினம் உறுதியாகி உள்ளது. அவருக்கு லேசான அறிகுறிகள் உள்ளன. ஆனால் நலமாக உள்ளார். இதை அவரே தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில் அவரது கணவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பில் கிளிண்டனுக்கு தொற்று பாதிப்பு இல்லை.

இதையொட்டி ஹிலாரி கிளிண்டன் கூறும்போது, கடுமையான நோய்க்கு எதிராக தடுப்பூசிகள் வழங்கும் பாதுகாப்புக்கு முன் எப்போதையும் விட நன்றியுள்ளவளாக இருக்கிறேன் என குறிப்பிட்டார்.

இந்த மாத தொடக்கத்தில் முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது நினைவுகூரத்தக்கது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...