உலக செய்திகள்

எச்.ஐ.வி கிருமிக்கு விரைவில் தடுப்பூசி கண்டுபிடிக்கப்படும் இறுதிகட்டத்தில் விஞ்ஞானிகள்

எச்.ஐ.வி நோய்த்தொற்றிற்கு ஒரு நீண்ட கால தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியின் இறுதி கட்டத்தில் விஞ்ஞானிகள் உள்ளனர். #HIV

தினத்தந்தி

ஒரு புதிய ஆய்வின் மூலம் எச்.ஐ.வி நோய்த்தொற்றிற்கு ஒரு நீண்ட கால தடுப்பூசி கண்டு பிடிக்கும் முயற்சியின் இறுதி கட்டத்தில் விஞ்ஞானிகள் உள்ளனர். ஒரு ஊசி சோதனைக்கு பயன்படுத்தபட்ட குரங்கை எச்.ஐ.வி நோய்க்கிருமியில் இருந்து 18 வாரங்கள் பாதுகாக்கிறது.

இது நோய்த்தொற்றுக்கு பல மாதங்கள் மனிதர்களுக்கு தடுப்பூசி வழங்க முடியும் எனக் கூறலாம், என ராக்பெல்லர் பல்கலைக்கழகத்தின் ஒரு ஆய்வு கூறுகிறது. பாலியல் முன் தடுப்பு மருந்து ப்ரெப் எடுக்கலாம், இருப்பினும் நீண்ட கால பயனுள்ள தடுப்பூசி இல்லை. என இயற்கை மருத்துவம் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த தடுப்பூசி கண்டு பிடிப்புக்கு உரிய அடிப்படை பணிகள் தொடங்கி விட்டன. ஆனால் இந்த தடுப்பூசி வருடத்ற்கு ஒரு முறை மட்டுமே வழங்க முடியும்.அது எப்போது கிடைக்கும் என்பது தெளிவாக வில்லை.

தற்போது, எச்.ஐ.விக்கு எந்தவிதமான சிகிச்சையும் இல்லை, வாழ்நாள் முழுவதும் ஆன்டிவைரல் சிகிச்சை நோய்த்தாக்குதலை கட்டுப்படுத்துகிறது. ஆனால் பெரும்பாலும் குமட்டல், வாந்தி மற்றும் தூக்கமின்மை போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது.

ஐரோப்பாவில் எச்.ஐ.வி. விகிதங்கள் உயர்ந்த போதிலும், கடந்த ஜூலையில் வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்கள் அடிப்படையில் எய்ட்ஸ் தொடர்பான நோயாளிகள் 10 ஆண்டுகளில் பாதியாக குறைந்துள்ளனர். எச்.ஐ.வி நோய்த்தொற்றின் பிற்பகுதியில் ஏற்படும் எய்ட்ஸ் ஒரு நோய்க்குறி ஆகும்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு