உலக செய்திகள்

போதைப்பொருளுடன் ஆயுதங்கள் கடத்திய பிரபல ஹாலிவுட் நடிகர் கைது

போதைப்பொருளுடன் ஆயுதங்கள் கடத்திய பிரபல ஹாலிவுட் நடிகர் கைது செய்யப்பட்டார்.

நியூயார்க்,

அமெரிக்காவை சேர்ந்த பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேசன் மிச்செல். இவர் ஸ்ட்ரெய்ட் அவுட்ட காம்ப்டன் படத்தில் மறைந்த ராப் பாடகர் ஈஸி இ கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். டிஸாஸ்டர் ஆர்ட்டிஸ்ட், காங்: ஸ்கல் ஐலேண்ட், மட்பவுண்ட் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். வெப் தொடர்களிலும் நடித்து இருக்கிறார். இந்த நிலையில் மிசிசிப்பி மாகாணத்தில் உள்ள கல்ப்போர்ட் என்ற இடத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஜேசன் மிச்செல் காரை நிறுத்தி அவர்கள் சோதனை போட்டனர்.

அந்த காரில் அதிக அளவில் போதைப்பொருள்களும், 19 கைத்துப்பாக்கிகளும், ஒரு ஏகே 47 ரக துப்பாக்கியும் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் ஜேசனை உடனடியாக கைது செய்தனர். அவர் மீது போதைப்பொருள் வைத்திருந்தது, ஆயுதங்களை கடத்தியது உள்ளிட்ட 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

தி சி என்ற வெப் தொடரில் தன்னுடன் நடித்த 2 நடிகைகளுக்கு ஜேசன் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்ததும், இதையடுத்து அவர் அந்த தொடரில் இருந்து நீக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு