உலக செய்திகள்

ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி, பிரான்ஸ் கோடீசுவரரை மணக்கிறார்? இது 4-வது திருமணம்

ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி, பிரான்ஸ் கோடீசுவரரை மணக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தினத்தந்தி

லாஸ் ஏஞ்சல்ஸ்,

பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி (வயது 43). இவர் 1996-ம் ஆண்டு டி.வி. பிரபலம் ஜானி லீ மில்லரை திருமணம் செய்தார். 2000-ம் ஆண்டில் விவாகரத்து செய்தார். பின்னர் நடிகர் பில்லி பாப் தாம்டனை 2-வது திருமணம் செய்தார். 2000-ம் ஆண்டு நடந்த இந்த திருமணம் 3 ஆண்டில் முடிவுக்கு வந்தது. 3-வது முறையாக நடிகர் பிராட் பிட்டை 2014-ல் திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணமும் 2016-ம் ஆண்டு முடிவுக்கு வந்தது.

பிராட் பிட்டைப் பொறுத்தமட்டில், அவர் தனது முன்னாள் மனைவி ஜெனிபர் ஆனிஸ்டனுடன் இணைந்து வாழ முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் ஏஞ்சலினா ஜோலி 4-வது திருமணத்துக்கு திட்டமிட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கோடீசுவரர் சேட்டோ மிராவல் என்பவரை ஏஞ்சலினா ஜோலி திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும், பிரான்சில் குடியேறப்போவதாகவும் லைப் அண்ட் ஸ்டைல் பத்திரிகை செய்தி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏஞ்சலினா ஜோலிக்கு 6 குழந்தைகள் இருப்பதும், அதில் சில குழந்தைகள் தத்து குழந்தைகள் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு