உலக செய்திகள்

இந்தியா உள்பட 8 நாடுகளின் பயணிகள் விமானத்திற்கு ஹாங்காங் அரசு தடை

இந்தியா உள்பட 8 நாடுகளில் இருந்து வரும் பயணிகள் விமானங்களுக்கு ஹாங்காங் அரசு தடை விதித்துள்ளது.

தினத்தந்தி

ஹாங்காங்,

ஹாங்காங் நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் அந்நாட்டு அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் மூலம் ஹாங்காங்கில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதாக அந்நாட்டு அரசு கூறியுள்ளது.

இதனை கட்டுப்படுத்தும் வகையில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளில் இருந்து வரும் பயணிகள் விமானத்திற்கு தடை விதிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி இந்தியா, ஆஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ், அமெரிக்கா, பாகிஸ்தான், இங்கிலாந்து மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய 8 நாடுகளில் இருந்து வரும் விமானங்களுக்கு வரும் மார்ச் 4 வரை தடை விதிக்கப்படுவதாக ஹாங்காங் அரசு அறிவித்துள்ளது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்