உலக செய்திகள்

கொரோனா வைரஸ் உருவானது எப்படி? சீனாவுக்கு நிபுணர் குழுவை அனுப்பி விசாரணை - டிரம்ப் அறிவிப்பு

கொரோனா வைரஸ் உருவானது எப்படி? என்று விசாரணை நடத்த சீனாவுக்கு நிபுணர் குழுவை அனுப்புவோம் என்று டிரம்ப் கூறினார்.

தினத்தந்தி

வாஷிங்டன்,

சீனாவில்தான் கொரோனா வைரஸ் முதன்முதலில் உருவானது. தற்போது, சீனாவில் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் வந்தாலும், உலகில் அதிகமாக பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உருவெடுத்துள்ளது.

அதனால், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், சீனா மீது அடிக்கடி ஆத்திரத்தை வெளிப்படுத்தி வருகிறார். கொரோனாவை சீனா வைரஸ் என்று வர்ணித்து வந்தார். கொரோனா குறித்து சீனா முன்கூட்டியே தகவல் தெரிவிக்காமல் மறைத்து விட்டதாக குற்றம் சாட்டினார்.

கடந்த சனிக்கிழமை, நிருபர்களை சந்தித்த டிரம்ப், கொரோனாவை திட்டமிட்டே சீனா பரப்பி விட்டிருந்தால், அந்நாடு பின்விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும் என்று கடுமையாக எச்சரித்தார். இந்நிலையில், டிரம்ப் மீண்டும் நிருபர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:-

சீனாவுடனான வர்த்தக பேரம் எனக்கு மகிழ்ச்சி அளித்தது. எல்லாமே மகிழ்ச்சி அளித்தது. பின்னர், பிளேக் (கொரோனா வைரஸ்) பற்றி தெரிய வந்தது. அது தெரிய வந்ததில் இருந்து எனக்கு மகிழ்ச்சி இல்லை.

இந்த நோய் எப்படி உருவானது? என்று விசாரணை நடத்த சீனாவுக்கு நிபுணர் குழுவை அமெரிக்கா அனுப்பும். சீனாவுக்கு குழுவை அனுப்புவது பற்றி சீனாவிடம் நீண்ட காலத்துக்கு முன்பே பேசினோம்.

இப்போது அனுப்ப விரும்புகிறோம். அங்கு என்ன நடக்கிறது? என்பதை அறிய விரும்புகிறோம். ஆனால், நிச்சயமாக சீனா அழைப்பு எதுவும் விடுக்கவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

விசாரணை அடிப்படையில், உண்மையை நாங்கள் கண்டுபிடிப்போம். இவ்வாறு டிரம்ப் கூறினார்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை