வாஷிங்டன்
பாப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7 ஆக பதிவாகி உள்ளது. இதனால் சுனாமியை ஏற்படும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் கிம்பே துறைமுக நகரத்திலிருந்து 139 கி.மீ. தொலைவில் மையம் கொண்டு இருந்தது. புதிய பிரிட்டன் தீவில் ராபோல் நகரிலிருந்து 180 கிமீ தொலைவில் உள்ளது.அமெரிக்க புவியியல் ஆய்வுமையம் இது 40 கிமீ ஆழத்தில் மையம் கொண்டதாக கூறி உள்ளது. நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதம் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.