உலக செய்திகள்

இறந்தவர்கள் உடல்களுடன் டைட்டன் நீர்மூழ்கி மீட்பு: அமெரிக்க கடலோர காவல்படை தகவல்

டைட்டானிக் கப்பலைப் பார்ப்பதற்காக நீருக்கடியில் சென்ற பயணத்தின் போது வெடித்த நீர்மூழ்கிக் கப்பலின் இடிபாடுகளில் இருந்து மனித உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அமெரிக்க கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

லண்டன்

கடலுக்குள் உடைந்து கிடக்கும் டைட்டானிக் கப்பலின் சிதிலங்களை பார்க்க டைட்டன் என்ற மினி நீர்மூழ்கி கப்பலில் சென்ற கோடீஸ்வரர்கள் 5 பேர் கப்பல் வெடித்து பலியான சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

டைட்டானிக் கப்பலை பார்வையிட சென்ற டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலின் உடைந்த பாகங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், அதில் இறந்தவர்களின் உடல்களும் காணப்படுவதாக தகவல் வெளியாகிள்ளது.

அமெரிக்க கடலோர காவல்படை வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்க மருத்துவ நிபுணர்களால் முறையாக பகுப்பாய்வு செய்ய

டைட்டானிக் கப்பலை பார்வையிடுவதற்கான பயணத்தின் போது வெடித்த ஓஷன் கேட் டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலில் ஐந்து பேர் இருந்தனர். இந்த நிலையில், ஜூன் 28ம் தேதி டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலின் உடைந்த பாகங்கள் பல மீட்கப்பட்டது.

இதனையடுத்து கனடாவின் நியூபவுண்ட்லாண்ட் மாகாணத்தின் செயின்ட் ஜான்ஸ் கடற்பகுதிக்கு கொண்டுசெல்லப்பட்டது. கடந்த 1912ம் ஆண்டில் விபத்துக்குள்ளான டைட்டானிக் கப்பல் தற்போது கனடாவின் நியூபவுண்ட்லாண்ட் தீவுக்கு 740 கி.மீ. தொலைவிலுள்ள கடல்படுகையில் காணப்படுகிறது.

இதனைப் பாவையிடும் பொருட்டு சுற்றுலா பயணிகளை அழைத்துச் செல்வதற்காக ஓஷன்கேட் எக்ஸ்பெடிஷன்ஸ் என்ற அமெரிக்க தனியா நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட டைட்டன் நீமூழ்கிக் கப்பல் கடந்த 18ம் தேதி பயணப்பட்டுள்ளது.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக புறப்பட்ட 1.45 மணி நேரத்தில் அந்த நீர்மூழ்கிக் கப்பல் அழுத்தம் காரணமாக வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில், டைட்டானிக் கப்பலைப் பாவையிடுவதற்காக நீமூழ்கியில் சென்ற பாகிஸ்தான் தொழிலதிபா ஷேசாதா தாவூத், அவரது மகன் சுலைமான் தாவூத் ஆகியோரும்,

ஓஷன்கேட் நிறுவனத்தின் நிறுவனா ஸ்டாக்டன் ரஷ், பிரித்தானிய தொழிலதிபா ஹமீஷ் ஹாடிங், பிரான்ஸ் கடற்படை முன்னாள் கமாண்டோ பால்-ஹென்றி நாகியோலே ஆகியோரும் மரணமடைந்தனர்.

இதில் பால்-ஹென்றி நாகியோலே, டைட்டானிக் நிறுவனம் சார்பில் செயல்பட்டு, மூழ்கியுள்ள டைட்டானிக் கப்பலில் இருந்து சுமார் 5,000 பொக்கிஷங்களை மீட்க உதவியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்