உலக செய்திகள்

லாவோஸ் நாட்டில் நீர்மின் திட்ட அணைக்கட்டு உடைந்தது, நுற்றுக்கணக்கானோரை காணவில்லை

லாவோஸ் நாட்டில் நீர்மின் திட்ட அணைகட்டு உடைந்தது விபத்து ஏற்பட்டது.

தினத்தந்தி

வியெண்டைன்,

மத்திய ஆசிய நாடுகளில் ஒன்றான லாவோஸ் நாட்டில் நீர்மின் உற்பத்தி அதிக அளவு நடைபெறுகிறது. அதிக அளவு உற்பத்தி செய்யப்படும் மின்சாரமானது, அண்டை நாடுகளான தாய்லாந்து போன்ற நாடுகளுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.

இந்த நிலையில், லாவோசில் தென்கிழக்கு பகுதியில் உள்ள அட்டபே மாகாணத்தின் சனாமக்சை மாவட்டத்தில் உள்ள கட்டுமானப்பணி நடைபெற்று வந்த நீர் மின் திட்ட அணைக்கட்டு உடைந்து விபத்து ஏற்பட்டுள்ளது. அணைக்கட்டு உடைந்ததால், 5 பில்லியன் கன மீட்டர் தண்ணீர், அசூர வேகத்தில் வெளியேறியது.

இதில், நீர் செல்லும் பாதையின் அருகாமையில் வசிக்கும் மக்கள் ஏராளமானோர் அடித்துச்செல்லப்பட்டனர். நீரில் எத்தனை பேர் அடித்துச்செல்லப்பட்டனர் என்பது பற்றிய தெளிவான விவரம் வெளியாகவில்லை.

எனினும், நூற்றுக்கணக்கானோர் நீரில் அடித்துச்செல்லப்பட்டதாக உள்ளூர் ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. பல வீடுகளும் அடித்துச்செல்லப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்