உலக செய்திகள்

ஒருபோதும் மறக்கமாட்டேன்... போரில் தாயை இழந்த 9 வயது சிறுமியின் மனமுருக்கும் கடிதம்

உக்ரைன்-ரஷிய போரில் தாயை இழந்த 9 வயது சிறுமி எழுதிய கடிதம் கல்நெஞ்சமும் கரையும் வகையில் உள்ளது.

தினத்தந்தி

கீவ்,

உக்ரைன் மற்றும் ரஷிய போரில் உயிரிழந்த தாய்க்கு அவரது 9 வயது மகள் எழுதிய சோக கடிதம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அதில், இந்த ஒட்டுமொத்த உலகிலும் சிறந்த தாய் நீங்கள். ஒருபோதும் உங்களை மறக்கமாட்டேன் என சிறுமி எழுதியுள்ளாள்.

உங்களுக்கு சொர்க்கம் கிடைத்திருக்கும் என நான் நினைக்கிறேன். சொர்க்கத்தில் மகிழ்ச்சியுடன் இருங்கள். என்னால் முடிந்தவரை நல்ல மனிதராக நான் இருப்பேன் என உறுதிமொழி அளித்துள்ள சிறுமி, அதனால் தானும் சொர்க்கத்திற்கு செல்ல முடியும் என்றும் தனது தாயை காண முடியும் என்றும் உருக்கமுடன் தெரிவித்துள்ளாள்.

இந்த பதிவானது உக்ரைன் உள்விவகார மந்திரியின் ஆலோசகர் ஆன்டன் கெராஷ்செங்கோ என்பவரால் பகிரப்பட்டு உள்ளது.

இதற்கு பலரும் பலவித விமர்சனங்களை வெளியிட்டு உள்ளனர். அதில் ஒருவர், ஒவ்வொரு குழந்தைக்கும் அதன் தாய்தான் எல்லாமே. அந்த சிறுமியின் வலியை நான் உணர்கிறேன். தாயை இழந்தபோது, அந்த சிறுமி எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பாள் என தெரிவித்து உள்ளார்.

இதேபோன்று மற்றொருவர், அந்த குழந்தையை தயவுசெய்து காப்பாற்றுங்கள். நல்லது செய்வதற்கான உயர்ந்த மனதைரியம் அந்த சிறுமியிடம் உள்ளது. தாயாரை இழந்தும் நம்பிக்கையை இழக்கவில்லை.

இந்த பதிவுடன் நின்று விடாமல், சிறுமியின் கல்வி மற்றும் அனைத்திற்கும் உங்களால் என்ன முடியுமோ அதனை செய்யுங்கள் என தெரிவித்து உள்ளார்.

ஆனால் பலரும் தயவு செய்து, இதுபோன்ற பதிவுகளை பகிராதீர்கள். இதனை எப்போது பார்க்கிறேனோ அல்லது படிக்கிறேனோ உணர்ச்சிவசப்பட்டு விடுகிறேன். உண்மையில் உதவியற்றவராக உணர்கிறேன். மணிக்கணக்காக அழுகிறேன் என்று அவர்கள் தெரிவித்து உள்ளனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்