கோப்புப்படம் 
உலக செய்திகள்

"பதவி விலக மாட்டேன்" - கோத்தபய ராஜபக்சே திட்டவட்ட அறிவிப்பு

அதிபர் பதவி முடியும் வரை பதவியில் இருப்பேன் என்று இலங்கை அதிபர் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

கொழும்பு,

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியின் காரணமாக, அங்குள்ள மக்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், அதிபர் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், அதிபர் பதவி முடியும் வரை பதவியில் இருப்பேன் என்று இலங்கை அதிபர் தெரிவித்துள்ளார். இலங்கை அதிபர் மற்றும் முன்னாள் மந்திரிகளுக்கு இடையேயான சந்திப்பு நிறைவடைந்தது. இலங்கை அதிபர் மாளிகையில் நடைபெற்ற இந்த கூட்டத்தின் முடிவில், நாளை மாலை புதிய அமைச்சரவை பொறுப்பேற்க திட்டமிடப்பட்டு உள்ளது.

எதிர்க்கட்சியினரை புதிய ஆட்சி அமைக்க அழைத்தும், அவர்கள் முன்வராததால், புதிய அமைச்சரவை அமைக்க திட்டமிட்டுள்ளதாக இலங்கை அதிபர் தெரிவித்துள்ளார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்